×

பார்சிலோனா கோல் மழை!

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக் தொடரில் பார்சிலோனா - ரியல் சோசிடாட் அணிகள் நேற்று மோதின. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் லியோனல் மெஸ்ஸி, செர்ஜியோ டெஸ்ட் தலா 2 கோல், கிரீஸ்மேன், டெம்பெல் தலா 1 கோல் அடித்தனர். இந்த போட்டியின் மூலம், பார்சிலோனா கிளப் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமை மெஸ்ஸிக்கு (768) கிடைத்துள்ளது. 28 லீக் ஆட்டங்களின் முடிவில் அத்லெடிகோ மாட்ரிட் (66), பார்சிலோனா (62), ரியல் மாட்ரிட் (60), செவில்லா (55) அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.



Tags : Barcelona , Barcelona, Cole
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...